தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் : வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இந்த டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்த்ரே ரஸ்சல், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப் ஆகியோருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஹெட் மயர் அணிக்கு திரும்பியுள்ளார்.

20 ஓவர் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:-

ரோவ்மன் பாவெல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், அலிக் அதானஸ், பேபியன் ஆலன் நிக்கோலஸ் பூரன், சார்லஸ், மேத்யூ போர்டே, ஹெட்மயர், ஷாய் ஹோப், அகேல் ஹூசைன், ஷமர் ஜோசப், மெக்காய், குடாகேஷ், ரூதர்போர்டு, ஷெப்பர்டு.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles