நடிகையாகும் முன்பு நோஸ் ஜாப், லிப் ஃபில்லர்ஸ் செய்தேன் : உண்மையை சொன்ன ஸ்ரீதேவி மகள்..!

தன் அழகை மெருகேற்ற லிப் ஃபில்லர்ஸ் செய்து கொண்டதுடன், மூக்கிலும் மாற்றம் செய்ததாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி தெரிவித்துள்ளார்.

அழகை மேம்படுத்த தான் செய்த காரியங்கள் குறித்து குஷி கபூர் உண்மையை சொன்னது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூருக்கு நடிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அம்மா வழியில் நடிகையாகிவிட்டார். ஜோயா அக்தர் இயக்கிய ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையானார் குஷி. அந்த படத்தின் ப்ரீமியருக்கு தன் அம்மாவின் உடையில் வந்தார் குஷி என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ஸ்ரீதேவி, குஷியின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியானது.

ஸ்ரீதேவியின் பட விழாவுக்கு வந்த 12 வயது குஷி பல்லில் பிரேஸ் அணிந்திருந்தார். தற்போது ஆர்ச்சீஸ் விழாவில் எடை குறைந்து வேறு மாதிரி இருக்கிறாரே என அந்த வீடியோவை பார்த்தவர்கள் தெரிவித்தார்கள். அந்த வீடியோவை வெளியிட்டவர் குஷி கபூர் lip fillers செய்து கொண்டதாக தெரிவித்தார். அதை பார்த்த குஷியோ, லிப் ஃபில்லர்ஸ் மட்டும் அல்ல நோஸ் ஜாபும் தான் என கமெண்ட் செய்தார்.

நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் அதை அவ்வளவு சீக்கிரத்தில் வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் குஷியோ தான் என்னென்ன செய்தோம் என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். அவரின் இந்த நேர்மை தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. குஷியின் நேர்மையை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இப்படி உண்மையை சொல்ல தைரியம் வேண்டும் குஷி. அது உங்களுக்கு இருக்கிறது என்கிறார்கள்.

குஷி சொன்னதை கேட்ட ஸ்ரீதேவியின் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். அழகாக இருந்த ஸ்ரீதேவி பாலிவுட் சென்ற பிறகே பிரஷர் தாங்காமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகான மூக்கை மாற்றினார்.தற்போது அவரின் மகளும் தன் மூக்கில் மாற்றம் செய்திருக்கிறார். பாலிவுட்டில் ஏன் இயற்கையான அழகை ஏற்க மறுத்து செயற்கையின் பின்னால் செல்ல வைக்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

குஷி கபூர் தன்னுடன் சேர்ந்து ஆர்ச்சீஸ் படத்தில் நடித்த வேதங் ரெய்னாவை காதலித்து வருகிறார். வேதங் மற்றும் குஷி கபூர் காதலிப்பதை அவர்களுக்கு நெருக்கமானவர்கள் உறுதி செய்தார்கள். இருந்தாலும் காதல் பற்றி குஷி கபூரோ, வேதங் ரெய்னாவோ இதுவரை எதுவும் சொல்லவில்லை. இருவரும் அவரவர் கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles