கிளப் வசந்த் கொலை வழக்கு : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்..!

கிளப் வசந்த் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரை இன்று (20) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறும் கடுவெல நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தங்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக நீதிமன்றில் முன்வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles