யுவராஜ் சிங்கின் சாதனை முறியடிப்பு : உலக சாதனை படைத்த சமோவா வீரர்..!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது சமோவா நாட்டின் வீரர் டேரியஸ் விசர் ஒரே ஓவரில் 39 ரன்கள் எடுத்து மாபெரும் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மேலும் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன் ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. முதன் முதலாக 2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் அந்த சாதனையை செய்தார். அதன் பின்பு, கீரான் பொல்லார்டு (2021), நிக்கோலஸ் பூரன் (2024), திபேந்திரா சிங் ஏரி (2024) ரோகித் சர்மா / ரிங்கு சிங் இணைந்து (2024) என ஐந்து முறை அந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

வனாட்டு அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஈஸ்ட் ஏசியா – பசிபிக் தகுதிச் சுற்றில் சமோவா அணி ஆடியது. முதலில் பேட்டிங் செய்த சமோவா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. இதில் டேரியஸ் விசர் அதிரடியாக ஆடி 62 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்தார். அதில் 5 பவுண்டரி மற்றும் 14 சிக்சர்கள் அடங்கும்.

இதனையடுத்து ஆடிய வனாட்டு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. சமோவா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வனாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15-வது ஓவரில் டேரியஸ் விசர் ஆறு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்டன. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன் எடுத்த சாதனை படைக்கப்பட்டது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles