ஆறுதல் வெற்றியில் இலங்கை மகளிர் அணி : தொடரை வென்றது அயர்லாந்து..!

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியினை பதிவுசெய்ய அயர்லாந்து மகளிர் அணி 2-1 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி பந்துவீசுவதற்கு தீர்மானித்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர்இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 23.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

சமரி அதபத்து 48 ஓட்டங்களையும், ஹர்சிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் ஆட்டநாயகியாக 48 ஓட்டங்களையும், 3 விக்கெட்களையும் வீழ்த்திய இலங்கை அணயின் தலைவி சமரி அத்தபத்து தெரிவானார். இதேவேளை முன்னதாக நடைபெற்ற இரு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் 1-1 என சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles