பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கையை நெருங்கிய பங்களாதேஷ்..!

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை அணி ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஐந்தாமிடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் அணியுடன் வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த பங்களாதேஷ் அணி இலங்கையை அணி பெற்றுள்ள அதே வெற்றி சதவீதத்தை பெற்றுள்ளது.

எனினும் பங்களாதேஷ் அணி நிகர ஓட்ட எண்ணிக்கை அடிப்படையில் ஆறாவது இடத்தில் உள்ளது. மாறாக பாகிஸ்தான அணி பங்களாதேஷுடன் தோல்வியை தழுவியதன் மூலம் எட்டாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடுகிறது. இதில் குறித்த தொடர் ஆரம்பமாக முன்னர் இலங்கை அணி 50 சதவீதத்துடன் 4வது இடத்தில் காணப்பட்டது. மேலும் இங்கிலாந்து 36.54 சதவீதத்துடன் 7வது இடத்தில் காணப்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது 5 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில் 2 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்து 40 சதவீதத்துடன் பின்னடைவை சந்தித்துள்ளது. மாறாக இங்கிலாந்து 14 போட்டிகளில் 7 வெற்றி, 6, 1 சமநிலை முடிவு என்ற வகையில் 41.07 என்ற சதவீத்துடன் முன்னேற்றம் கண்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles