Thursday, February 5, 2026
Homeபாலியல் புகார் குறித்து மம்முட்டி, மோகன்லால் மவுனம் காப்பது ஏன்..? : ரேவதி..!

பாலியல் புகார் குறித்து மம்முட்டி, மோகன்லால் மவுனம் காப்பது ஏன்..? : ரேவதி..!

கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

இதுபற்றி டபிள்யூ சி.சி.அமைப்பின் நிறுவன உறுப்பினரும் நடிகையுமான ரேவதி கூறுகையில்,

“இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் இப்போது தீவிரமாக எடுத்துக் கொள்ள தொடங்கி உள்ளனர்.

திரை உலகை சேர்ந்த சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இந்த பிரச்சனைக்கு கருத்து எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் எங்களைப் போலவே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாங்கள் பேசுகிறோம். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.”

இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

Most Popular