விபத்தில் சிக்கிய ரவி தேஜா..!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ரவி தேஜா தனது 75 ஆவது படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தின் போது ரவி தேஜாவின் தசைப்பகுதி கிழிந்துள்ளது. இதற்காக அவர் ஆறு வார காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

விபத்தில் சிக்கியது தொடர்பாக ரவி தேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். தற்போது நலமாக உணர்கிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்துகள் மற்றும் ஆதரவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய பிறகும், ரவி தேஜா தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது காயம் மேலும் அதிகரித்துள்ளது. ரவி தேஜா விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் விரைவில் நலம்பெற ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles