சிறுவர் இல்லத்தில் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மீட்பு..!

மாத்தளை சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்கள் கெக்கிராவ கிராநேகம பிரதேசத்தில் சுற்றித் திரிந்த போது கெக்கிராவ பொலிஸாரால் இன்று (29) பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் (17) வயதுடைய மற்றும் 09ஆம் வகுப்பில் கல்வி கற்கும் (14) வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளும், 9ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மற்றொரு (14) வயதுடைய கண்டி ரிக்கில கஸ்கட மற்றும் மாத்தளை ஹத்தோட்டமுன அப்பகுதியில் வசிக்கும் மூன்று மாணவிகளே இவ்வாறு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக மாத்தளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த மூன்று மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், மாணவிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீண்டும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles