வீட்டில் சடலமாக பெண் மீட்பு..!

நான்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணின் இறந்த சடலம் கண்டுபிடிக்கபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயிரிக்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த பெண்ணின் தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்காத காரணத்தால், இது தொடர்பில் ஆராயுமாறு உயிரிழந்த பெண்ணின் மகன் அயல் வீட்டு நபருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த வீட்டுக்குச் சென்ற போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்ததுடன் வீட்டினுள் துர்நாற்றம் வீசியமையால் இச்சம்பவம் தொடர்பில் நான்னெரிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் அந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நான்னேரியா, பயிரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறித்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், இது ஒரு கொலை என்றும் சடலத்தின் அருகே ஒரு கோடரியும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் இரண்டு மகள்கள் மற்றும் மகன் வீட்டிலிருந்து வௌியேறி வேலை பார்த்து வருவதாகவும், உயிரிழந்த பெண் மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நன்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles