சஜித்துக்கு ஆதரவு : சுமந்திரனின் முடிவு குறித்து மாவை வெளியிட்ட அறிவிப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானம் எடுக்கவில்லை, இது சுமந்திரனால் சுயமாக எடுக்கப்பட்ட தீர்மானம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சஜித்துக்கு இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு அளிக்கும் என்று நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல, இது சில உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.யோகேஸ்வரன் மற்றும் ஜி.ஸ்ரீநேசன் போன்ற இலங்கை தமிழரசு கட்சி மூத்த உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles