Sunday, February 8, 2026
Homeகுடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்..!

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்..!

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகங்களுக்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் இன்று (3) காத்திருப்பதை காணமுடிந்தது.

நாடு முழுவதிலும் உள்ள தொலைதூரப் பகுதிகளில் இருந்து பெருந்திரளான மக்கள் குடிவரவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக பல வாரங்களாக வரிசையில் காத்து இருக்கின்றனர்.

இவ்வாறு வரிசையில் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு ஏறக்குறைய ஆயிரம் கடவுச்சீட்டுகளை வழங்குவதோடு, வரிசையில் மீதமுள்ளவர்கள் இரவை அதே இடத்தில் கழிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular