ஹூவாயின் புது போல்டபில் போன் : வெளியீட்டு திகதி அறிவிப்பு..!

ஹூவாய் நிறுவனம் வருகிற 10 ஆம் திகதி தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 9 ஆம் திகதி ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், அதற்கு அடுத்த நாளிலேயே ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஹூவாய் நிறுவனம் டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை மூன்றாக மடிக்க முடியும் என்று தெரிகிறது. ஹூவாய் நிறுவனம் இத்தகைய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பது அனைவரும் அறிந்தது தான்.

முன்னதாக ஹூவாய் நுகர்வோர் வியாபார பிரிவு தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு புதுவித மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. தற்போது இதனை ஹூவாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இது தொடர்பான பதிவில் ரிச்சர்ட் யு,

“ஐந்து ஆண்டுகள் விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளால், நாங்கள் அறிவியல் புனைவை நனவாக்கியுள்ளோம். இது ஹூவாயின் அதிநவீன, புதுமை மிக்க சாதனமாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles