வீதி விபத்துக்களால் பெண் உள்ளிட்ட நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் – நீர்கொழும்பு வீதியின் வீரம்புகெதர பிரதேசத்தில் வீதியில் பயணித்த பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 68 வயதுடைய பெண் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு – புத்தளம் வீதியின் வயிக்கால பகுதியில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் 26 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் – பரந்தன் வீதியில் பரந்தன் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள வடிகாலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles