ஜனாதிபதியின் வேலைத் திட்டம் தொடர வேண்டும். இல்லை என்றால் இந்த நாடு மீண்டும் அழிந்துவிடும்

எமது நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நெருக்கடியின் போது, ஆட்சியாளர்கள் இல்லாமல் எமது நாடு அராஜகமாக இருந்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சவால்களை ஏற்று நாட்டை அராஜகத்திலிருந்து விடுவிப்பதற்காக பாடுபட்டார்.

இந்நாட்டு மக்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கினார். தேர்தலை நடத்துவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கால சந்ததியினரை புதிய உலகிற்கும் புதிய பொருளாதாரத்திற்கான பயணத்திற்கும் கொண்டு செல்லும் பயணத்தை ஆரம்பித்தார்.

அந்த வேலைத் திட்டம் தொடர வேண்டும். இல்லை என்றால் இந்த நாடு மீண்டும் அழிந்துவிடும்.

அரசியல் சித்தாந்தங்களை விட்டுவிட்டு, அனைத்து மக்களும் தாயகத்தைப் பாதுகாத்து,  அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   ஆரம்பித்துள்ள பயணம் வெற்றியடைய இந்த நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரின் ஆதரவையும் அவருக்கு வழங்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles