யாழில் இடம்பெற்ற கோர விபத்து: இளைஞரின் பாதம் துண்டாகிய சோகம்

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கால் , மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு பாதம் துண்டாகியுள்ளது.

விபத்தினை அடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு யாழ் .போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், துண்டாப்பட்ட பாதத்தினையும் மீட்டு நோயாளர் காவு வண்டியில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles