கலங்க வைத்த தளபதி 69 முதல் அப்டேட்..!

விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை சமீபத்தில் எச்.வினோத் ஒரு விருது வழங்கும் விழாவில் கூறினார்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படத்தின் படத்தொகுப்பாளராக பிரதீப் இ ராகவ் பணியாற்றவுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

கே.வி. என் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது தளபதி விஜய்க்காக ஒரு டிரிபியூட் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அவர் நடிக்கும் கடைசி திரைப்படமாக பேசப்படுகிறது. மக்களும் ரசிகர்களும் அதற்கான வெளிபாடுகளையும் , வருத்தத்தையும் தெரிவித்து வருவதுப் போல் மிகவும் எமோஷனலான வீடியோவாக அமைந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles