முதல்முறை தற்கொலை மெஷினில் படுத்த பெண்..அடுத்து நடந்த சம்பவம் – போலீஸ் அதிரடி!

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தற்கொலை செய்வது என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருப்பினும், சில நாடுகளில் தற்கொலை செய்து கொள்வது சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது.

அதாவது, மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் தற்கொலை செய்து கொள்ளும் உரிமையை அந்த நாடுகள் வழங்குகின்றன. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் இதற்கான அனுமதி உள்ளது.

இந்த சூழலில், சர்கோ பாட் என அழைக்கப்படும் இந்த நவீன தற்கொலை மெஷின் முதல்முறையாக 4 வயதான அமெரிக்கப் பெண் முதல்முறையாக இதைப் பயன்படுத்தி இருக்கிறார்.

இது குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இதை அமெரிக்காவைச் சேர்ந்த 64 வயதான பெண் பயன்படுத்தினார். அவர் மிகக் கடுமையான எதிர்ப்பு நோய் குறைபாடு காரணமாகப் பாதிக்கப்பட்டு இருந்தார்” என்று கூறியிருந்தார்.

அவர் உள்ளே சென்று படுத்த சில நொடிகளில் அவர் அமைதியாகவும் வேகமாகவும் கண்ணியமான முறையிலும் உயிரிழந்ததாக கூறியிருந்தார். தேவையான மருத்துவ மற்றும் மனநல சோதனைகளுக்கு பிறகே அவரை இதைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles