இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் டீசல் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 332 ரூபாவாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 307 ரூபாவாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாயாகும்.

352 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.

202 ரூபாவாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 183 ரூபாய் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles