சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி வெளியான குறித்த பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குக் கடந்த 1 ஆம் திகதி முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரையில் விண்ணப்பிக்காதவர்கள் www.onlineexams.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியுமெனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles