ஹெஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஹெஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக அவரது உறவினர் ஹஷேம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஹெஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

3 வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில், ஹெஸ்புல்லாவின் நிர்வாகக் குழு தலைவர் ஹஷேம் சபிதீன், ஹெஸ்புல்லா புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் அலி ஹுசைன் ஹசிமா ஆகியோர் ஹெஸ்புல்லா தளபதிகளுடன் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதென இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹஷேம் சபிதீன் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியிருந்தாலும், இதை ஹெஸ்புல்லா இயக்கம் இன்னும் உறுதி செய்யவில்லை என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here