சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ காரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பயன்படுத்தியக் குற்றச்சாட்டு விவகாரத்தில், கைதான மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று செவ்வாய்யக்கிழமை (29.10.2024) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்தனர்.

இதன்பின்னர் அவர்கள் இருவரும் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுக்கவிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here