கனடாவில் பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக மிரட்டிய சிறுமி

கனடாவில் பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக மிரட்டியதாக 15 சிறுமி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் அஜாக்ஸில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக சிறுமி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேராயர் டெனிஸ் ஓ’கானர் கத்தோலிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஸ்னாப்சாட் இடுகை ஒன்றின் மூலம் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் வீட்டை சோதனையிட்ட போது, ஆயுதங்கள் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles