பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போகும் போட்டியாளர் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த செய்தியை பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆண்டவராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-ன் 3 ஆவது வாரம் சென்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தில் இருக்கின்றது. தற்போது போட்டியாளர்கள் இன்னொருவர் போல் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமாக நாமினேஷனில், ஜெவ்ரி, ஜக்குலின், அருண் பிரசாத், ரஞ்சித், சத்யா, தீபக், பவித்திரா, அன்சிதா, சுனிதா ஆகியோர் இருக்கிறார்கள்.

இந்த வாரம் மக்கள் அளித்த வொர்ட்டிங்கில் சுனிதா குறைவான வாக்குகள் பெற்று வெளியேறும் நிலையில் இருந்தார். ஆனால் அவருக்கு நாமினேஷன் ஃபிரி பாஸ் கிடைத்த காரணத்தினால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சுனிதா வெளியேறாவிட்டால் அன்ஷிதா அல்லது பவித்திரா இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு உள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here