சொத்து பிரச்சினையில் தாய், சகோதரி எரித்துக் கொலை: தந்தை, மகன் கைது

இந்தியா, ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் ஹடபாடா பகுதியில் தாய் மற்றும் மகள் இருவரும் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 90 வயதான தாய் மற்றும் 62 வயதான மகள் இருவரது உடல்களும் எரிந்த நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், முழுதாக எரிந்த நிலையில் இரண்டு உடல்களையும் மீட்டுள்ளனர்.

இயற்கைக்கு மாறான மரணமாக இருந்தமையால், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை விசாரித்ததில் உயிரிழந்த மூதாட்டியின் மகன் மற்றும் பேரனால் இக் கொலைகள் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நிலம் மற்றும் சொத்து பிரச்சினையில் நன்றாக திட்டமிடப்பட்டு இக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன.

முதலில் தாய் மற்றும் சகோதரியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் உடல்களில் தீ மூட்டப்பட்டுள்ளன.

இச் செயலை செய்த தந்தை மற்றும் மகனை பொலிஸார் கைது செய்தனர்.

சொத்துப் பிரிச்சினையில் தாய் மற்றும் சகோதரியை எரித்துக் கொன்ற சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles