மாஸ் லுக்கில் கோலி சோடா பட நடிகை சீதா… வியந்து போன ரசிகர்கள்

கோலி சோடா படத்தில் ATM கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யம்டைந்த நடிகை சீதா தற்போது மாஸ் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான கோலி சோடா படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் தான் நடிகை சீதா

கோலி சோடா திரைப்பமத்தை இயக்குநர் 4 சிறுவர்கள் 2 சிறுமிகள் இவர்களை சுற்றி நடக்கும் கதைக்களத்தை கொண்டு சுவாரஸ்யமாக காட்டியிருப்பார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் இந்த படத்தில் வரும் ATM கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டது.

அதில் புட்டி கண்ணாடி, ஒளியான தேகம் என ATM கதாபாத்திரத்தில் நடிகை சீதா அசத்தியிருப்பார். இதில் ஒரு செடி ஒன் பிளவர் என்று காதலுக்கு அவர் சொல்லும் டயலாக் திரையரங்கில் அனைவரது கைத்தட்டல்களையும் பெற்றது.

அதனை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் சமந்தா நடித்த 10 என்றதுக்குள்ள மற்றும் பிரபுதேவா நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான சார்லின் சாப்ளின் போன்ற சில படங்களில் நடித்தார்.

பின்னர் பட வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தால் நீண்ட காலம் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாஸ் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles