சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள விஷ்ணு என்ற சிறுவன் நடுவர்கள் அனைவரையும் தனது திறமையால் பிரமிக்க வைத்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.

10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.

இவர்களுக்கான குரல் தேடல் சில வாரங்களுக்கு முன்பு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன் தனது திறமையால் பாடல் பாடி நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிறுவனுக்கு கீபோர்டு, படிப்பு செலவு, டிவி, கேஸ் ஸ்டவ் என அனைத்தையும் தொகுப்பாளர்கள் மற்றும் நடுவர்கள் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here