கனடிய மாகாண முதல்வர்கள் பிரதமருடன் சந்திப்பு நடத்த கோரிக்கை

கனடாவின் மாகாண முதல்வர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அவசர சந்திப்பு ஒன்றை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக இந்த சந்திப்பினை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார்.

எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக அவர் அறிவித்திருந்தார். பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் வரி அறவீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வகையில் மாகாண முதல்வர்கள் இந்த அறவீடு தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles