பூமி மீது மோதிய விண்கல் – தீப்பிழம்பாக சிதறிய பிரம்மிப்பூட்டும் காட்சிகள்!

70cm விட்டம் கொண்ட விண்கல் ஒன்று ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் விழுந்து தீப்பிழம்பாக சிதறிய பிரம்மிப்பூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புவி வட்டப்பாதைக்குள் 70 cm விட்டம் கொண்ட இந்த விண்கல் நள்ளிரவு வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அதன்படி அந்த விண்கல் நேற்று இரவு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.

கண்டுபிடிக்கப்பட்ட 12 மணி நேரத்துக்கு பிறகு அந்த விண்கல்லானது ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் விழுந்துள்ளது.

பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், விண்கல் பல துண்டுகளாக சிதைந்து அங்குள்ள வனப்பகுதியில் தீப்பிழம்பாக சிதறி விழுந்தது.

இதுதொடர்பான பிரம்மிப்பூட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

அதிர்ஷ்டவசமாக விண்கல்லின் அளவு மற்றும் அது விழுந்த இடம் காரணமாக பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விண்கல் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஒரு தீப்பந்து போல காட்சியளித்துவிட்டு சென்றுவிடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles