101 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி வெற்றி..!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 164 ஓட்டங்களையும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 146 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

இந்தநிலையில் பங்களாதேஷ் அணி தமது இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதன்படி, 287 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles