அரிசி விலைகள் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை!

அரிசியின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை குறைக்குமாறு அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி 1 கிலோகிராம் நாட்டு அரிசியை நுகர்வோருக்கு மொத்த விலையில் 225 ரூபாவுக்கும், சில்லறை விலை 230 ரூபாவுக்கும் வழங்குமாறு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது தொடர்பில் தீவிரமாக செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி அரிசியின் விலை பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1KG நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாய், சில்லறை விலை 230 ரூபாய்.
1KG வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாய், சில்லறை விலை 220 ரூபாய்.
இறக்குமதி செய்யப்படும் 1KG நாட்டு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாய்.
1KG சம்பா அரிசியின் மொத்த விலை 235 ரூபாய், சில்லறை விலை 240 ரூபாய்.
1KG கீரி சம்பாவின் மொத்த விற்பனை விலை 255 ரூபாய், சில்லறை விலை 260 ரூபாய்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles