வசூல் வேட்டை நடத்தும் புஷ்பா 2

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் ‘புஷ்பா 2’ முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தில் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

படம் வெளியாகி 2 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

4 நாட்களில் 600 கோடி வசூலை எட்டும் என்றும் விரைவில் ‘புஷ்பா 2 தி ரூல்’ ஒட்டுமொத்தமாக 1000 கோடி வசூலை எட்டிய படங்களின் வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles