இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் : 5ஆவது நாள் ஆட்டம் இன்று…!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

348 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடி வரும், இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 5 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து, 317 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 328 ஓட்டங்களைப் பெற்றது.

தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து, 358 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் இன்னும் 143 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles