பிரித்தானியா – சிரியா மக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு..!

சிரியாவின் புகலிட கோரிக்கைகளை இடைநிறுத்திவைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இணைந்துள்ளது.

சிரியா நிலவரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தின் பின்னணியில், புகலிட கோரிக்கையை நிராகரிக்கும் முடிவை பிரித்தானியா எடுத்துள்ளது.

ஜேர்மனி, ஸ்வீடன், ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸை தொடர்ந்து பிரித்தானியா இந்த நடவடிக்கையை பின்பற்றுகிறது.

இது குறித்து பிரித்தானிய உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் கூறுகையில்,

“பஷார் அல் அசாத் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, சிரியாவின் நிலைமை மிகவும் வேகமாக மாறி வருகிறது. சிலர் சிரியாவுக்கு திரும்புவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். எனவே, இப்போதைய நிலைமையை நாங்கள் மதிப்பீடு செய்யவும், கண்காணிக்கவும், சிரியா தொடர்பான புகலிட கோரிக்கை மனுவை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியேற்ற அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் கூறுகையில்,

“சிரியர்களின் புகலிட மனுக்கள் பெரும்பாலும் அடிப்படையற்றதாக மாறியுள்ளன. இப்போது அநாவசியமான மனுவுகளை விரைவில் நிராகரித்து, அவர்களை திருப்பி அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் சிரியாவின் நிலைமை சீராகும் வரை புகலிட மனுக்களை நிலுவையில் வைக்க தீர்மானித்துள்ளன. ஜேர்மனியின் அகதி மற்றும் குடியேற்ற அலுவலகத்தின் தகவல்படி, சிரியா தொடர்பான 47,000 மனுக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

ஆஸ்திரியாவும் இதே முடிவை எடுத்து, “நிலைமை தெளிவாகும் வரை பொறுமையாக இருப்பது முக்கியம்,” என்று கூறியுள்ளது. ஸ்வீடன், பிரான்ஸ், நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளும் மனுக்கள் மீது நடவடிக்கையை நிறுத்தியுள்ளன.

சிரியாவில் நிலைமை முடிவிற்கு வரும் வரை இந்த முடிவுகள் தொடரும் என நம்பப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles