நாளை ஆரம்பமாகவுள்ள லங்கா டி10 சுப்பர் லீக் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை ஆரம்பமாகவுள்ள இந்த தொடரானது எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் குறித்த தொடரில் ஜஃப்னா டைட்டன்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ், நுவரெலியா கிங்ஸ், கொழும்பு ஜகுவர்ஸ், கண்டி போல்ட்ஸ், மற்றும் காலி மார்வெல்ஸ் ஆகிய 06 அணிகள் பங்குபற்றவுள்ளன.

இதற்கமைய குழு Aவில் ஜஃப்னா டைட்டன்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் மற்றும் நுவரெலியா கிங்ஸ் அணிகளும், குழு Bயில் கொழும்பு ஜகுவர்ஸ், கண்டி போல்ட்ஸ், மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகளும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here