சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் மொஹமட் அமீர் அறிவித்துள்ளார்.

32 வயதான மொஹமட் அமீர் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

இவர் இதுவரையில் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அத்துடன் “பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடுவது மிகப்பெரிய கௌரவம். இது ஒரு கடினமான முடிவு, ஆனால் அடுத்த தலைமுறைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.”என மொஹமட் அமீர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here