பிரித்தானிய பூங்காவில் பரபரப்பு சம்பவம்!

பிரித்தானியாவின் பர்மிங்காமில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது.

பர்மிங்காமில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில், வியாழக்கிழமை மாலை(12) பயங்கரமான விபத்து ஏற்பட்டது. மாலை 7:30 மணியளவில், சவாரி இயங்கிக் கொண்டிருந்த போது சாதனம் ஒன்று திடீரென தரையிறங்கியது,

இதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு அவசர சேவைப் படையினர் Centenary சதுக்கப் பகுதிக்கு விரைந்தனர்.

மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை, 13 பேர் காயமடைந்த நிலையில் 2 பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் 12க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும் , யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles