தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு..!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சியின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று (17) முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி அனைத்து மாவட்ட செயலகங்களிலும், இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திலும் இது தொடர்பான அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 6ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.

அதேவேளை, வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles