பேட்மிண்டன் தரவரிசை: பி.வி.சிந்து முன்னேற்றம்

சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியானது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து ஒரு இடம் முன்னேறி 15-வது இடத்திற்கு முன்னேறினார்.

சையது மோடி பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து கோப்பை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 12வது இடத்தில் தொடர்கிறார்.

பிரனாய் (26), பிரியான்ஷு (34), கிரண் ஜார்ஜ் (38) பின்தங்கினர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரீஷா-காயத்ரி ஜோடி, 2 இடம் முன்னேறி முதல் முறையாக 11-வது இடம் பிடித்து அசத்தியது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் அதிக தொடரில் பங்கேற்காத இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles