பிரேசில் நாட்டின் மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து நேற்று மாலை செல் போலோ நகர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டது.

அதில் 45 பயணிகள் பயணம் செய்தனர்.

தியொபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸின் ரயர் ஒன்று திடீரென வெடித்தது.

இதனால் அந்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறி மீது பஸ் வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 38 பேர் உயிரிழந்ததோடு மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்தில் 38 பேர் பலியானது குறித்து அறிந்த பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

நடப்பு ஆண்டில் மாத்திரம் சாலை விபத்து தொடர்பான சம்பவங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லொறி மீது பயணிகள் பஸ் மோதியதில் 38 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here