விமானத்திலிருந்து கீழே இறங்க முயன்ற பணிப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்தில் விமான பணிப்பெண் ஒருவர் விமான கதவை திறந்து கீழே இறங்க முயன்று விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TUI-க்கு சொந்தமான விமானம் இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது.

விமானத்தில் பயணிகள் ஏறுவதற்காக ஏணிப்படி வைக்கப்பட்டிருக்கும்.

விமானம் புறப்படும் முன் கதவு அடைக்கப்பட்டு, அந்த ஏணிப்படிகள் அகற்றப்படும்.

அதன்பின் விமானம் புறப்படும்.

அந்த வகையில் ஏணிப்படிகள் பொருத்தப்பட்டு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறினர்.

விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

அப்போது விமான பணிப்பெண் ஒருவர் கதவை திறந்து கீழே இறங்க முயன்றார்.

ஆனால் படிக்கட்டு விமானத்துடன் இணையாமல் தனியாக இருந்துள்ளது.

விமானம்தான் புறப்படவில்லையே என அந்த பணிப்பெண் கதவை திறந்தது படிக்கட்டில் கால் வைப்பது போல் வைக்க, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

விமான ஓடுதளத்தில் விழுந்த பணிப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக ஆம்புலன்ஸ் சர்வீஸ் அழைக்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டது.

பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles