ஓராண்டில் அதிக ரன்கள் அடித்து ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது.

முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்தது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

இதனால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1,602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles