சச்சின் திரைப்படம் ரீரிலிசை உறுதி செய்த படக்குழு

கடந்த 2005 ஆம் ஆண்டுஜான் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சச்சின் திரைப்படம்.

இவர்களுடன் வடிவேலு, சந்தானம் , பாலாஜி, ரகுவரன் நடித்து இருந்தனர்.

இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இன்றும் இப்படத்தின் காமெடி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்துக் கொண்டுதான் உள்ளது.

விஜய் மற்றும் ஜெனிலியா இருவருக்கும் இடையே மிக அழகான கெமிஸ்டிரி இப்படத்தில் இருக்கும். இதனால் இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்டனர்.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். படத்தின் பாடல்கள் அனைத்தும் பெருமளவு ஹிட்டானது.

இந்நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனை சமீபத்தில் நடந்த நேர்காணலில் தயாரிப்பாளர் எஸ்.தாணு உறுதி அளித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles