நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையில் காவல்துறையால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறித் தொலைதூர பேருந்து சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்துகளைச் சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட தூரச் சேவை பேருந்துகளில் அவர்கள் பயணிப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல், கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திக் கொண்டு வாகனம் செலுத்துதல், பாதசாரி கடவைகளில் வாகனங்களை முந்திச் செல்வது மற்றும் அதிவேகமாகச் செல்வது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படவுள்ளன.

சீருடையில் உள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் பேருந்தினை நிறுத்திச் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சாரதிகளுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here