நான் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன்- ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்த நிலையில், நான் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் ஜோ பைடன் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.

ஜனநாயக கட்சி சார்பில் முதலில் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், பிரசாரத்தில் தடுமாறியதால் ஜோ பைடன் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்துதான் கமலா ஹாரிஸ் களத்தில் இறங்கினார்.

எனினும் அவர் படு தோல்வி அடைந்தார்.

இதனை விமர்சிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன், நான் போட்டியிட்டு இருந்தால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருப்பேன் என்று கூறியுள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles