Monday, February 2, 2026
HomeMain NewsIndiaபுதுச்சேரியில் HMPV தொற்றாளர் அடையாளம்!

புதுச்சேரியில் HMPV தொற்றாளர் அடையாளம்!

சீனாவில் பரவிவரும் HMPV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியொருவர் இந்தியாவின் புதுச்சேரி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார் .

தமிழ்நாடு – புதுச்சேரியில் ஜிப்மர் வைத்தியசாலையில் கடும் காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கும் HMPV வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அச்சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை பணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular