அந்தமான், நிகோபார் தீவை ஒட்டிய வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்..!

அந்தமான் மற்றும் நிகோபார் தீவை ஒட்டிய வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு உணரப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் திங்கட்கிழமை மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 11.27 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 10.37 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.55 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles