இரும்பு கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர் கான் ?

லோகேஷ் கனகராஜ் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா, உபேந்திரா, அமீர்கான், சௌபின் சாஹிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பல நேர்காணலில் இரும்புகை மாயாவி என்ற திரைப்படத்தை குறித்து அவர் கூறியுள்ளார்.

அத்திரைப்படமே அவரின் டிரீம் ப்ராஜக்ட் எனவும் கூறியுள்ளார்.

இப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்பொழுது இப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகரான அமீர்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரும்பு கை மாயாவி திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். ஆனால் இத்தகவலை குறித்து லோகேஷும் அமீர்கானும் எதும் செய்திகளை கூறவில்லை.

இதனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles