நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பகுதியிலும், மாத்தளை மாவட்டத்தில் லக்கலை, பல்லேகம, நாவுல, பல்லேபொல பகுதிகளிலும், பதுளை மாவட்டத்தில் பாததும்பர, பன்வில, மெததும்பர ஆகிய பகுதிகளிலும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, தொலுவ பகுதிகளிலும், மாத்தளை மாவட்டத்தில் இரத்தோட்டை, வில்கமுவ, யட்டவத்தை, உக்குவளை பகுதிகளிலும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here