நாளை 75 மில்லிமீற்றர் அளவில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் நாளை (25) மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஊவா, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.

மேலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles